இலங்கையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மூடப்படவுள்ள பாடசாலைகள்

Report Print Sujitha Sri in கல்வி

இலங்கையில் 12 பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இம்முறை இடம்பெற்ற க.பொ.த உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளின் வினாத்தாள் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு குறித்த பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு - ரோயல் கல்லூரி, கொழும்பு - நலந்தா கல்லூரி, பம்பலபிட்டி இந்து கல்லூரி, களுத்துறை ஞானோதய, இரத்தினபுரி மிஹிந்து கல்லூரி, குருநாகல் புனித ஆனா, கண்டி கிங்ஸ்வுட், கண்டி விஹாரமாதேவி மகளிர் மஹா வித்தியாலயம், கண்டி சீதாதேவி மகளிர் கல்லூரி, காலி வித்தியாலோக, பதுளை விஹாரமாதேவி மகளிர் கல்லூரி மற்றும் பதுளை - ஊவா மஹா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளே இந்த பட்டியலில் அடங்குகின்றன.

குறித்த பாடசாலைகளை தவிர்த்து ஏனைய அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் இரண்டாம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.