இலங்கை பாடசாலைகளில் விரைவில் கொண்டு வரப்படும் தடை

Report Print Sujitha Sri in கல்வி

இலங்கையில் பாடசாலைகளில் புதிய தடையொன்று விரைவில் கொண்டு வரப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகளை தடை செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த தடைக்கு தேவையான சட்டமுறைகள் விரைவில் கொண்டு வரப்படும் என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பலாங்கொடையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளாமை காரணமாக சமூகமானது பாரிய பின்னடைவை சந்திப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.