மலையக தொழிலாளர் வர்க்கத்தினரின் கல்விச் செயற்திட்டம் இறக்குவானையில்

Report Print Gokulan Gokulan in கல்வி

இரத்தினபுரி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப் பை, கற்றல் உபகரணங்கள், பாதணிகள் என்பன வழங்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வு இறக்குவானை பரியோவான் தமிழ் கல்லூரியில் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

மலையக தொழிலாளர் வர்க்கத்தினரின் அனுசரணையில் இறக்குவானை பரியோவான் தமிழ் கல்லூரியின் அதிபர் பூபாலபிள்ளை கமலேஸ்வரனின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

அன்றைய தினம் வரவேற்பு, கொடியேற்றம், மரக்கன்று நடுகை ஆகியவற்றோடு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற இச்செயற்திட்டத்துக்கு இ/பரியோவான் தமிழ் கல்லூரி, இ/மாதம்பை இல: 2 தமிழ் வித்தியாலயம், இ/ஸ்பிரிங்வூட் தமிழ் வித்தியாலயம், இ/தெதனகல தமிழ் வித்தியாலயம், இ/ஹவுப்பே தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மலையக தொழிலாளர் வர்க்கத்தினரால் முன்னெடுக்கப்படும் 8ஆவது செயற்திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers