புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்

Report Print Kamel Kamel in கல்வி

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று மதியம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணைய தளத்தின் வழியாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் மூன்று லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.