தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும்! வவுனியாவில் முதலிடம் பிடித்த மாணவி

Report Print Thileepan Thileepan in கல்வி

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் எனவும் தான் பாடசாலை கல்வியை மட்டும் நம்பி படித்து இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்தன. இந்நிலையில் தரணியா 192 புள்ளிகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

முதலிடம் பிடித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நான் வவுனியா, கிடாச்சூரியில் வசிக்கிறேன். நான் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றேன். இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலையை அடைய வழிகாட்டிய எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன்.

நான் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லாது, பாடசாலை கல்வியை மட்டும் நம்பியே படித்து இந்த நிலையை அடைந்துள்ளேன். எதிர்காலத்தில் மாவட்டத்தில் சிறந்த வைத்தியராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலக்கு என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 32 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers