வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் இடம்பிடித்துள்ள விபுலானந்தா கல்லூரி மாணவர்கள்

Report Print Thileepan Thileepan in கல்வி

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் இருந்து 144 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 55 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதில் விஜயசங்கர் நிருத்தனன், கஜேந்திரன் ஜஸ்விந் ஆகிய இருவரும் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும், கடந்த காலங்களை விட இம்முறை பெறுபேறு அதிகரித்துள்ளது. இதனை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றிகள் என அவர் கூறியுள்ளார்.

Latest Offers

loading...