கந்தளாய் அல்தாரீக் கனிஷ்ட வித்தியாலயத்தில் முதல் தடவையாக ஐந்து மாணவர்கள் சித்தி

Report Print Mubarak in கல்வி

அண்மையில் வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கந்தளாய் அல்தாரீக் கனிஷ்ட வித்தியாலயத்தில் முதல் தடவையாக ஐந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை கந்தளாய் அல்தாரீக் கனிஷ்ட வித்தியாலய முதல்வர் ஏ.ஆர்.எம்.ஜவாஹிர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில்,

  • எம்.என்.எம்.ஆதீப் 165 புள்ளிகளையும்,
  • ஏ.அப்துல் றஹ்மான் 158 புள்ளிகளையும்,
  • எம்.ஏ.எப்.அம்ரா 155 புள்ளிகளையும்,
  • எம்.எச்.எப்.றீம் 154 புள்ளிகளையும்,
  • ஏ.எம்.எப்.ஹனா 153 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மாணவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Latest Offers

loading...