புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை நிலைநாட்டியுள்ள கல்முனை கல்வி வலயம்

Report Print Varunan in கல்வி

தரம் ஐந்தின் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் 425 பேர் சித்தியடைந்துள்ளனர்.

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள கல்முனை பற்றியா கல்லூரியில் 94 மாணவர்களும், மருதமுனை அல் மனார் தேசிய கல்லூரியில் 23 மாணவர்களும், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலயத்தில் 19 மாணவர்களும், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 18 ஆகிய மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

கல்முனை வலயத்தில் முதலாமிடத்தினை மருதமுனை அல் மனார் கலாலூரி மாணவன் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வினவுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 23 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இதில் 191 புள்ளிகளை ஹலிலுல் ரஹ்மான் அஸ்றிப் அஹமட் என்ற மாணவன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்முனை வலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளமை இதன் சிறப்பாகும்.

இச்சாதனைக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும், பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும், நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் கூறியுள்ளார்.

கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் எமது பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 94 பேர் 153 வெட்டு புள்ளிக்கு மேல் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் கூடுதலான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ள பாடசாலை என்ற நற்பெயரை பெற செய்துள்ளனர். இந்த வெற்றிக்கு அனைவரும் அயராது பாடுபட்டுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ஆசிரியர்களின் அயராத உழைப்பு போற்றுதலுக்குரியது. இறைவனின் ஆசிப்பெற்ற இந்த பாடசாலை அண்மைக் காலமாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 19 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர். அந்தவகையில், 20 வருடங்களுக்கு பின்னர் அதிகூடிய மாணவர்கள் சித்தி பெற்று சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தெரிவித்துள்ளார்.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் கலையரசன் கூறுகையில்,

நேற்றைய தினம் வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சையில் எமது கல்முனை உவெஸ்லி வெஸ்லி உயர்தர பாடசாலை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் 18 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

இச்சாதனைக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும், பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் தமது நன்றியையும், பாராட்டுக்களையும் அதிபர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...