மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலக்கு: மாணவி சு.சுமித்திராயினி

Report Print Ashik in கல்வி

சிறந்த மருத்துவராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே எனது எதிர்கால இலக்கு என மாணவி சு.சுமித்திராயினி தெரிவித்துள்ளார்.

மன்னார் - சித்தி விநாயகர் இந்து தேசியப் பாடசாலை மாணவியான இவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்டையில் 190 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

நான் அதிகாலை எழுந்து ஊக்கத்துடன் விடா முயற்சியுடனும் கற்றேன் எனவும், அத்தோடு வீட்டில் எனக்கு ஊக்கமளித்த எனது பெற்றோருக்கும் மற்றும் பாடசாலையில் சிறந்த முறையில் கற்றுத்தந்த ஆசிரியர் பு.பிரதீபனுக்கும், அதிபருக்கும் எனது நன்றிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, புலமைப்பரிசில் பரீட்டையில் குறித்த பாடசாலை மாணவர்கள் 35 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.