வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் முதற்தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

Report Print Theesan in கல்வி

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வவுனியாவில் உள்ள சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் சித்தி பதிவாகியுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 159 புள்ளிகளை பெற்று மாணவி ஒருவர் சித்தி பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையில் குணநீதன் வித்தியா என்ற மாணவியே சித்தியடைந்துள்ளார். மாணவியை கற்பித்த எஸ்.சாந்தமூர்த்தி ஆசிரியை பாடசாலை சமூகம் பாராட்டியுள்ளது.