சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!!

Report Print Ajith Ajith in கல்வி

2019 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த பரீட்சை டிசம்பர் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இந்த பரீட்சை 4,987 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சைக்கு 717,008 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.