மட்டக்களப்பில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இடம்பெற்றுவரும் க.பொ.த.சாதாரண தர பரீட்சை

Report Print Kumar in கல்வி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இன்றையதினம் ஆரம்பமான க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் எந்தவித இடையூறுகளுமின்றி நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.

5 கல்வி வலயங்களிலிருந்தும் 25191 பேர் தோற்றுகின்றனர். இதற்காக 160 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 14 இணைப்பு பரீட்சை நிலையங்கள் அமைக்கப் பட்டள்ளன.

இதில் பாடசாலை பரீட்சாத்திகள் 10189 பேரும் தனியார் பரீட்சாத்திகள் 15002 பேரும் இம்முறை பரீட்சைக்காக தோற்றுகின்றனர்.

மட்டக்களப்பில் மேலதிக பரீட்சை மேற்பார்வையாளர்கள் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிற கல்வி வலயங்களில் பணியாற்றும் அதிகாரிகள் இம்முறை நகர பாடசாலைகளுக்கு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனமழைக்கு மத்தியிலும் பெற்றோர் தமது பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வந்திருந்ததுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதிக செய்திகள் ருஷாத்