அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்

Report Print Varunan in கல்வி

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் இன்று கல்விப்பொது தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.

கடும் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் உரிய வேளைக்கு பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்,

இன்று ஆரம்பமாகும் இப்பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

பரீட்சைகள் காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதால், பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்பு பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாகயம் சனத் பூஜித அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...