தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை! பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

Report Print Murali Murali in கல்வி

இந்த ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை, எதிர்வரும் வருடத்தில் பிரபல பாடசாலையின் தரம் 6க்கு இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்வியமைச்சினால் புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஆண்கள் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம், றோயல் கல்லூரியில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 180 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இது 187 புள்ளிகளாக காணப்பட்டது.

பெண்கள் பாடசாலைகளில் (தமிழ்) அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கண்டி, பெண்கள் உயர் தர பாடசாலைக்கான வெட்டுப்புள்ளியாக 179 புள்ளிகளும், கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 175 புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் கலவன் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு 168 புள்ளிகளும் (கடந்த முறை 178), கல்முனை, கார்மேல் பற்றிமா கல்லூரிக்கு 166 புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 20ம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு 339,410 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன் அதில் 332,179 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலுக்கான மாணவர் எண்ணிக்கை 5,000ஆக அதிகரிக்கப்பட்டு 20,000 மாக உயர்த்தப்பட்டதோடு, அதில் 250 புலமைப் பரிசில்கள் விசேட தேவையுடையோர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பெறுபேறுகள் தயாரிக்கும் போது நாடளாவிய அல்லது மாவட்ட ரீதியில் Rank வழங்கப்படாமை விசேட அம்சமாகும்.

பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை பார்வையிட இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...