க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு

Report Print Sujitha Sri in கல்வி

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை குறித்த பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியான பின் https://doenets.lk/examresults இல் மாணவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்.