பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சரில் வரும் மாற்றங்கள்

Report Print Sujitha Sri in கல்வி

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடசாலை சீருடை வவுச்சரில் சில மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதாவது கடந்த காலங்களில் 525 ரூபாவாக காணப்பட்ட தொகையானது தற்போது 735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த அரசாங்க காலப்பகுதியில் வழங்கப்பட்ட வவுச்சர்களின் பின் புறத்தில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன.

அதில் அரசியல்வாதிகளின் புகைப்படங்களுக்கு பதிலாக மாணவர்களின் புகைப்படங்களை உள்வாங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.