க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு

Report Print Navoj in கல்வி

2019இல் க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில், பாடசாலையின் அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

குறித்த பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் கலை ஆகிய பிரிவுகளில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 30 பேர் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக கணிதப் பிரிவில் விஜிதன் குருஷாந் எனும் மாணவன் மாவட்டத்தில் முதலாம் நிலையை பெற்று சாதனை புரிந்துள்ளார்.

அதேபோன்று கணேசன் சன்ஜய்குமார் எனும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 4ஆம் நிலையை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த மாணவர்கள் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.