வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு செல்லும் இலங்கை மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை

Report Print Vethu Vethu in கல்வி

உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்து 15 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் வாக்குறுதியின்படி வெளிநாடுகளில் கல்வி கற்க முடியாமல் போகின்றது.

இது தொடர்பில் தாம் பங்களாதேஷ் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நாட்டு பல்கலைக்கழகங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Latest Offers

loading...