யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கணனி நிகழ்ச்சி வடிவமைப்பு போட்டிகள்

Report Print Theesan in கல்வி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கி ஐ.சி.ரி.சி.எஸ் இனால் ஹக்கின்ட்ரா நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வளாகத்தில், வளாகத்தின் முதல்வர் ரி.மங்ளேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

பிரயோக விஞ்ஞான பீடத்தினால் 4ஆவது முறையாக இந்த வருடமும் ஹக்கின்ட்ரா நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இம்முறை இந்நிகழ்ச்சி மேலும் பல புதிய அம்சங்களை கொண்டதாக அமைந்திருந்தது.

இந்நிகழ்வை முன்னிட்டு நடத்தப்படும் போட்டியில் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைகழகங்களில் இருந்து பல பல்கலைக்கழக குழுக்கள் போட்டியில் பங்கேற்றுள்ளன.

Full stack development, Mobile app development, AI & Machine learning, ஆர் app development போன்ற பல பயனுள்ள அமர்வுகள் இந்நிகழ்வில் நடைபெற்றுள்ளன.

இந்நிகழ்வின் பிரதான நிதி அனுசரணையாளரான தேசிய அறிவியல் நிறுவனத்துடன், வேறு பல நிறுவனங்களும் இணைந்து அனுசரணை வழங்கியிருந்தன.

இந் நிகழ்வில் பௌதீக விஞ்ஞான பிரிவின் துறைத்தலைவர் எஸ். திருக்குமாரன், கணக்காளர் தகவல் தொடர்பாடல் மற்றும் கணனி விஞ்ஞான கழகத்தின் சிரேஸ்ட கணக்காளர் ஆர். நகுலன், ரி.கோகுலன் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு கணனி நிறுவனங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.