ஊடக கல்விக்கென இலங்கையில் பல்கலைக்கழக கல்லூரி

Report Print Ajith Ajith in கல்வி

இலங்கையில் ஊடக கல்விக்கென பல்கலைக்கழக கல்லூரி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்றவகையில் இந்த கல்லூரி அமையவுள்ளது.

இலங்கையில் முன்னேற்றமான ஊடக கலாச்சாரத்தை உருவாக்கும் முகமாக இந்த கல்லூரி அமைக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த கல்லூரிகள் கொழும்பு பல்கலைக்கழகம் அல்லது களனி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைக்கப்படுவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.