கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள்

Report Print Ajith Ajith in கல்வி

அரச பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சைகளை ரத்து செய்வதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணையில் பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் என்பவற்றில் பங்கேற்கின்றனர்

இந்த காலத்தில் அவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எனவே முதலாம் ஆண்டு தவணைப் பரீட்சைகளை ரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இரண்டாம் தவணை மற்றும் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் முன்னரை போன்றே நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.