கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாணவர்கள் வீடுகளிலிருந்து தாங்களாகவே தங்கள் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டிய தருணம் இதுவாகும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாணவர்களிடையே சுவரொட்டி (Poster) வரையும் போட்டி நடத்தப்பட்டிருந்தது.
வைரஸ் வடக்குக்குள் வரும் வழிகளை முடக்குவோம்! என்ற தொனிப்பொருளில் குறித்த போட்டியை மனித நேயப் பணியாளரான பிறேம் தனது முகநூலினூடாக முன்னெடுத்திருந்தார்.
தரம் 5 தொடக்கம் 10 வரையான மாணவர்கள் இந்த போட்டியில் பங்கெடுத்திருந்தனர்.

இந்த போட்டியில் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் செல்வன் அல்றின் குறூஸ் சாருயன் முதலாம் பரிசினை பெற்றுக் கொண்டார்.
அடுத்து மூன்று இடங்களுக்கான பரிசில்களை மூன்று மாணவர்கள் பெற்றுக்கொண்டிருந்தனர்.
இந்த செயற்பாடு வீட்டில் முடங்கியுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாக மாணவர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.