ஆங்கிலத்தில் C சித்தி பெற்ற ரஞ்சன் ராமநாயக்க

Report Print Steephen Steephen in கல்வி

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

இந்த நிலையில் அவர் அந்த பரீட்சையில் C சித்தியை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ரஞ்சன் ராமநாயக்க தனது முகநூல் பக்கத்தில் பரீட்சை முடிவினை பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆங்கில பாடத்தில் C சித்தியை பெற்றுள்ளதன் மூலம் சட்டப் படிப்புக்கான தகுதியை பூர்த்தி செய்துள்ளதாக ரஞ்சன் கூறியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.