3 மாதங்களின் பின்னர் இன்று ஆரம்பமாகும் பாடசாலைகள்! மாற்றமடையும் நேரங்கள்

Report Print Vethu Vethu in கல்வி

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கு அதிக காலம் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.

இன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு வருகைத்தர வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை பிற்பகல் 3.30 மணி வரை சில வகுப்பினருக்கு பாடசாலைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 3.30 வரை பாடசாலைகள் நடத்தப்படும் போது ஆசிரியர்களின் நேர அட்டவனை தயாரிக்கப்படவுள்ளது..

அதற்கமைய 5 நாட்களும் ஒரே ஆசிரியரை 3.30 மணி வரை பணியில் ஈடுபடுத்தாமல் பொருத்தமான வகையில் ஆசிரியர்களை ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்திரானந்தன் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு கால அட்டவனை வழங்கும் போது பொருத்தமான காலப்பகுதியை ஒதுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முதலாம் பிரிவு ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் 30 நிமிடங்களுக்கு முன்னர் பாடசாலைக்கு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் அதற்காக இன்னுமொரு ஆசிரியர் கட்டயமாக ஈடுபடுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நாடாளவிய ரீதியில் இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் எதிர்வரும் ஆறாம் திகதி மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video