க.பொ.சாதாரண பரீட்சை பெறுபேறு மீளாய்வுக்கான விண்ணப்பங்களின் இறுதி திகதி நீடிப்பு

Report Print Ajith Ajith in கல்வி

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சையின் பெறுபேறு மீளாய்வுக்கான விண்ணப்பங்களின் இறுதி திகதி ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விண்ணப்பதாரிகள் தமது விண்ணங்களை எதிர்வரும் ஜூலை 31ம் திகதிக்கு முன்னர் அனுப்பவேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் தேசிய மீளாய்வு,பரீட்சைகள் திணைக்களம், அஞ்சல் பெட்டி இலக்கம் 1503,கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.