ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திருத்தம் - நேரத்திலும் மாற்றம்

Report Print Vethu Vethu in கல்வி

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்ட பரிந்துரையின் கீழ் இந்த வருடம் மற்றும் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் 2 திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய முதலாவது வினாத்தாளுக்கு பதிலளிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது வழங்கப்பட்டுள்ள 45 நிமிட நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை 15 நிமிடங்களில் நீடித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது வினா தாளில் தொடர்புடைய செயற்பாடுகளின் கீழ் தற்போது வழங்கப்படும் கேள்விகளிலும் மாற்றம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணைக்கயாளர் நாயகம் சனத் பூஜித அறிக்கை ஒன்று வெளியிட்டு தெரிவித்துள்ளார்.