உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

Report Print Kanmani in கல்வி
795Shares

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த நான்காம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் முழுமையாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 200 ஐ விட அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில்,

  • திங்கட்கிழமை - 1, 2ஆம் வகுப்புக்கள்
  • செவ்வாய்கிழமை - 2 , 5ஆம் வகுப்புக்கள்
  • புதன்கிழமை - 3 , 5ஆம் வகுப்புக்கள்
  • வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை - 4 , 5ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த பாடசாலைகளில் ஏனைய வகுப்புக்கள்,

  • திங்கட்கிழமை - 6 , 10 , 11 , 12 மற்றும் 13ஆம் வகுப்புக்கள்
  • செவ்வாய்கிழமை - 7 , 10 , 11 , 12 மற்றும் 13ஆம் வகுப்புக்கள்
  • புதன்கிழமை - 8 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்
  • வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை - 9 , 10 , 11 , 12 மற்றும் 13ஆம் வகுப்புக்கள் என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.