பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள திருத்தம்

Report Print Vethu Vethu in கல்வி

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட ஆலோசனை கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

200 இற்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில், கல்வி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தரத்திற்கும் வெவ்வேறு தினங்கள் ஒதுக்கப்பட்டன.

எனினும், கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, அந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் எவ்வித தடையும் இல்லை என கல்வி அமைச்சு, அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.


you may like this video