மீள திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்! வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Murali Murali in கல்வி

அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் வழமை போல் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பபல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 15 முதல் மருத்துவ பீடங்களின் 3ம் ஆண்டு மாணவர்களின் பரீட்சைகள் நடைபெற்றதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்ட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டாலும், பல்கலைக்கழகங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.