க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்!

Report Print Murali Murali in கல்வி

க.பொ.த உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 12ம் திகதி முதல் நவம்பர் 6ம் திகதி வரை க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 2,648 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித கூறியுள்ளார்.

இதேவேளை, ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 11ம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,936 நிலையங்களில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரீட்சைகளின் போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.