உத்தரவை மீறி திறக்கப்படும் தனியார் கல்வி நிலையங்கள்! அரசு கடுமையான எச்சரிக்கை

Report Print Thileepan Thileepan in கல்வி

வவுனியாவில் உத்தரவை மீறி திறக்கப்படும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன கடுமையாக எச்சரித்துள்ளார்.

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் சில மீள திறக்கப்பட்டமை குறித்து கேட்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அரச உத்தரவை மீறி தனியார் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டால் பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதியின்றி திறக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனவே, கொவிட் - 19இன் தாக்கத்தை கட்டுப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You may like this video