2019 உயர்தர பரீட்சை வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

Report Print Ajith Ajith in கல்வி

2019 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் வெட்டுப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டிற்கான உயர்தரப்பரீட்சை தேர்வு தற்போது நடைபெற்று வருவதால், 2019ஆம் ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படாமை தொடர்பில் மாணவர்கள் மத்தியில் இருந்து ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் கொரோனா பரவலை இந்த தாமதத்துக்கு காரணம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.