தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று வழமைக்குத் திரும்பியுள்ளன என்று பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தில் கல்வி பயிலும் 11 மாணவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாக நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதையடுத்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் உட்பிரவேசிப்பது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்தது.
குறித்த மாணவர்களின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பல்கலைக்கழக செயற்பாடுகள் இன்று வழமைக்குத் திரும்பியுள்ளன" - என்றார்.