கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

Report Print Kumar in கல்வி

கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசாரப்பீட மாணவர்களுக்கு கலை,கலாசார பீடாதிபதி ஜீ.கென்னடி அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிவித்தலில், 2018/2019 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.10.19 ஆம் திகதியிலிருந்து இலத்திரனியல் தொழினுட்பத்தின் (ZOOM) மூலம் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மாணவர்களுக்கான இணைப்பு எதிர்வரும் 2020.10.17 ம் திகதி தொடக்கம் esn.ac.lk எனும் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு நிரல் (Orientation schedule ) நேர அட்டவணை(Time table) என்பனவும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.