2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் வெட்டுப்புள்ளி வெளியானது

Report Print Ajith Ajith in கல்வி

2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளின் வெட்டுப்புள்ளி ( இசெட் ஸ்கோர்) வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே வெளியிடப்பட வேண்டிய இந்த முடிவுகள் நாட்டில் கொரோனா பரவல் காரணமாகவே தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.