கொழும்பு இந்துக் கல்லூரியில் 50 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை

Report Print Thileepan Thileepan in கல்வி
66Shares

கொழும்பு இந்துக் கல்லூரியில் 50 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெளியாகியுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் கொழும்பு இந்து கல்லூரி மாணவன் எஸ்.நிமேசன் 194 புள்ளிகளையும், எஸ்.துசாந்த் 192 புள்ளிகளையும் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

இவ்விரு மாணவர்களும் உள்ளடங்களாக 50 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர். இம் மாணவர்களுக்கு கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.