பல்கலைக்கழக மாணவர்களுக்கான பரீட்சைகளை ஒன்லைன் முறையில் நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பரீட்சை நடாத்துவது குறித்த ஓர் வழிமுறையொன்றை ஒரு வார காலத்திற்குள் வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்லைன் முறையில் பல்கலைக்கழக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில்லை என்பதனால் எவ்வாறு பரீட்சை நடாத்துவது என்பது குறித்து பூரண விளக்கம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கையும் இணையத்தின் ஊடாகவே நடைபெற்று வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கொவிட் நோய்த் தொற்று காரணமாக இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.