சபரகமுவா பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் கல்வி கருத்தரங்கு கிழக்கில் ஆரம்பம்!

Report Print Samaran Samaran in கல்வி
60Shares

இலங்கை சபரகமுவா பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகத்தின் வருடாந்த கல்வி கருத்தரங்கு கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு மத்திய நிலையங்களில் இன்று 8.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த கருத்தரங்கினை மண்டுமுனை தென் மேற்கு பிரதேச சபை கெளரவ தவிசாளர் புஸ்பலிங்கம் அவர்களும்,பட்டிப்பளை கோட்டக்கல்வி பணிப்பாளர் தயாசீலன் அவர்களும்,உட்டா நிறுவனத்தின் தலைவர் கருணாகரன் அவர்களும்,சரஸ்வதி விக்னேஸ்வரா மகாவித்தியாலய உப அதிபர் ஸ்ரீதரன் அவர்களும் பிரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகமும் இணைந்து இந்த கருத்தரங்கை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

நான்கு மத்திய நிலையங்களான கொக்கட்டிச்சோலை,அரசடித்தீவு,வெள்ளாவெளி மற்றும் மண்டூர் ஆகிய இடங்களில் சுமார் 600வரையான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகிறார்கள்.

அந்த வகையில் இந்த கருத்தரங்கு நாளைய தினமும் நான்கு மத்திய நிலையங்களிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.