கிழக்கில் சபரகமுவா பிரயோக விஞ்ஞானபீட தமிழ் மாணவர்கள் நடாத்திய கல்வி கருத்தரங்கு நிறைவடைந்தது!

Report Print Samaran Samaran in கல்வி

மட்டக்களப்பு மாணவர்கள் பயன் பெற்ற சபரகமுவா பிரயோக விஞ்ஞானபீட தமிழ் சமூகத்தின் கல்வி கருத்தரங்கு நிறைவடைந்தது.

சபரகமுவா பல்கலைக்கழகத்தின் பீரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கு நேற்றைய தினம் நிறைவடைந்தது.

கடந்த இரண்டு நாட்களாக கா.பொ.த (சா/த) மாணவர்களுக்கு சபரகமுவா பிரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகம் ஏற்பாடு செய்திருந்த கல்வி கருத்தரங்கு கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, வெள்ளாவெளி மற்றும் மண்டூர் ஆகிய மட்டக்களப்பின் நான்கு மத்திய நிலையங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது.

கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்குரிய பயிற்சி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு அதற்குரிய விளக்கங்களாகவும் மற்றும் பாடப்பரப்பு சம்மந்தப்பட்ட விளக்கங்களாகவும் இந்த கருத்தரங்கு மாற்றப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 28 பாடசாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்றிருந்த இந்த கல்வி கருத்தில் 600வரையான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருத்தார்கள்.

அத்துடன் கிழக்கு மாகணத்தில் முதன் முறையாக சபரகமுவா பிரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு நேற்று முந்தினம் சபரகமுவா பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் முடித்து வைக்கப்பட்டது.