கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் வைரவிழாவை கொண்டாடியது!

Report Print Samaran Samaran in கல்வி

யாழ், வடமராட்சிக் கல்வி வலயத்தில் கொம்மந்தறை என்ற கிராமத்தில் அமைந்துள்ள கம்பர்மலை வித்தியாலயத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வித்தியாலயத்தின் வைரவிழா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வித்தியாலயத்தின் வைரவிழாவுக்கு பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதர் ச.பாலச்சந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். அதிபர் வ. ரமணசுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் "மருதமஞ்சரி” என்ற விழாமலர் வெளியீடும் இடம்பெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக, வடமராட்சி கல்வி வலயப் பணிப்பாளர் யோ.ரவீந்திரன், ஓய்வுநிலை கல்வி வலயப் பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் பிரதம விருந்தினர் ச.பாலச்சந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிய சரஸ்வதி சிலை சிறப்பு விருந்தினர் யோ.ரவீந்திரன் அவர்களால் திரை நீக்கம் செய்யப்பட்டது.

பல வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட இந்தப் பாடசாலை 1997 ஆம் ஆண்டு "பூபாள ராகங்கள்” என்ற நிகழ்வை வித்தியாலய மைதானத்தில் கொண்டாடியது. அதன்பின்னர் மீண்டுமொரு வரலாற்று நிகழ்வாக இன்றைய வைரவிழா நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.