100 கோடி ரூபா வேண்டாம்! மஹிந்தவை விட்டு விலகும் நால்வர் யார்?

Report Print Vethu Vethu in தேர்தல்

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியலிருந்து நான்கு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைய ஆயத்தமாகுவதாக கட்சித் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நான்கு பேரில் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரபல அமைச்சர் என தெரிவிக்கப்படுகின்றது. மற்றவர் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் எனவும், இன்னொருவர் மஹியங்களை பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

கண்டியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றவர் தற்போது வரையில் கூட்டு எதிர்க்கட்சியில் பிரபல கதாபாத்திரத்தில் உள்ள போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைவதற்கு இடமளிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குறித்த முன்னாள் அமைச்சருக்கு புதிய கட்சியில் இணைவதற்கு 100 கோடி ரூபா பணம் வழங்குவதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் நிதி வழங்குநர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதிலும் அவர் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...

Comments