உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தை பாதிக்கும்..! மஹிந்த தேசப்பிரிய

Report Print Kamel Kamel in தேர்தல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு காலம் தாழ்த்துவது ஜனநாயகத்தை பாதிக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்… உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்திற்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

விரைவில் தேர்தலை நடத்தி மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் துறைசார் அமைச்சருக்கே உண்டு.

சட்டத்தினாலேயே அந்த உரிமை துறைசார் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழு ஆயத்தமாக உள்ளது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Comments