உள்ளூராட்சித் தேர்தல்கள்: விசேட சட்டங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

Report Print Aasim in தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட சட்டங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்த பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை சட்டங்களின் திருத்த நகல் சட்டமூலமே நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தின் விசேட அமர்வொன்று கூட்டப்பட்டிருந்தது. பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.

இந்த விசேட நாடாளுமன்ற அமர்வு நேற்று மாலை ஆறு மணி தாண்டியும் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.