தேர்தலை தீர்மானிக்கும் நோக்கில் இன்று ஒன்றுகூடும் தேர்தல் ஆணைக்குழு

Report Print Kamel Kamel in தேர்தல்

தேர்தல் குறித்து தீர்மானிக்கும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு இன்றைய தினம் கூட உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ண வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்தக்கூடாது என நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடையுத்தரவினைத் தொடர்ந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா அதற்கான சாத்தியங்கள் உண்டா என இன்றைய தினம் ஆராயப்பட உள்ளது.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப:பு இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.