டென்மார்க் நகரசபை உறுப்பினராக தெரிவாகியுள்ள ஈழத்தமிழர்

Report Print Gokulan Gokulan in தேர்தல்

டென்மார்க்கில் உள்ள பெருநகராட்சிகளில் ஒன்றான Sonderborg நகரசபைக்கான தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 21ஆம் நடைபெற்ற தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கணேஸ்வரன் சண்முகரத்தினம் என்பவரே இதில் வெற்றி பெற்று 2ஆவது முறையாகவும் நகரசபை உறுப்பினராகியுள்ளார்.

கிளிநொச்சி, வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 31 உறுப்பினர்களைக் கொண்ட Sonderborg நகரசபையில் 6ஆவது அதிகூடிய வாக்கை பெற்றவராக திகழ்கிறார்.

கணேஸ்வரன் சண்முகரத்தினம் தனது ஆரம்பக் கல்வியை கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையில் தொடங்கி, யாழ். ஸ்கந்தவரோதயா, வசாவிளான் மத்திய கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அத்துடன், கடந்த 1990ஆம் ஆண்டு டென்மாக் சென்ற அவர் அங்கு இயந்திர தொழில்நுட்பவியலாளராக பணியாற்றுவதுடன், சுயதொழில் முனைவோராக வர்த்தக நிறுவனங்களையும் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் மக்கள் பன்மைத்துவ பூர்வீக குடிமக்களை வரவேற்கின்ற்போதிலும் ஈழத்தமிழர்களின்பால் அதீத கரிசனையும் விருப்பும் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதற்க்கு தமிழரின் பண்பாடு கல்வி குடும்பவாழ்க்கை போன்றவை அவர்களைக்கவர்ந்துள்ளதே காரணமாகும்

இலங்கையில் அரசியல் காரணங்களினால் சிதைக்கப்பட்டு உலகின் பலபாகங்களில் ஏதிலிகளாக குடியேறிய தமிழர்கள் தமது முயற்சியில் அரசியல் பொருளாதாரம் கல்வி கலை போன்றவற்றில் தடம்பதிப்பது தமிழினத்துக்கு பெருமையே