யாழில் உள்ளூராட்சித் தேர்தல் முறைகள் தொடர்பான விசேட கருத்தரங்கு

Report Print Thamilin Tholan in தேர்தல்

யாழ்ப்பாணம் சிந்தனைக்கூடம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் உள்ளூராட்சித் தேர்தல் முறைகள் தொடர்பான விசேட கருத்தரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கருத்தரங்கு இன்று முற்பகல் 10.30 மணி முதல் யாழ். இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள சிந்தனைக் கூடக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

சிந்தனைக் கூடப் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறைகள், வேட்பாளர்களுக்கான விதிமுறைகள், வாக்காளர்களுக்கான வழிகாட்டல்கள் எனும் தலைப்புக்களில் யாழ். மாவட்டப் பிரதித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் விசேட கருத்துரை நிகழ்த்தினார்.

கருத்துரையினைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது. திறந்த கலந்துரையாடலின் போது உள்ளூராட்சித் தேர்தல் முறைகள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு யாழ். மாவட்டப் பிரதித் தேர்தல் ஆணையாளர் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வட மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கமும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.

இதில் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.வரதராஜப்பெருமாள், முன்னாள் வட மாகாண சபை வேட்பாளர் மு.தம்பிராஜா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.