முதன்முறையாக உள்ளூராட்சி தேர்தலுக்கு பெருமளவு நிதி செலவு

Report Print Ajith Ajith in தேர்தல்

இலங்கையில் முதன்முறையாக கலப்பு முறையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு பெருமளவு நிதி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மதிப்பீட்டின்படி 3.5 பில்லியன் ரூபாய்கள் இதற்கு செலவாகும் என்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தேர்தலில் 60 வீதமானோர் தொகுதி முறையிலும் 40 வீதமானவர்கள் விருப்புத் தெரிவு முறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டின் தேர்தல்கள் என்ற அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 5.5 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அதில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகை உள்ளூராட்சி தேர்தலுக்கு செலவிடப்படவுள்ளது.

உள்ளுராட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நாளை முதல் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.