தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவிப்பு

Report Print Shalini in தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு முழுவதிலும் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே தடவையில் தேர்தல் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தலின்போது முறைகேடுகள் இடம்பெறுமாக இருந்தால், அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.