சாவகச்சேரியில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழரசுக் கட்சி

Report Print Suthanthiran Suthanthiran in தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர்களான அருந்தவபாலன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சயந்தன், வலி,வடக்கு முன்னாள் பிரதேசபைத் தலைவர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.