சாய்ந்தமருது பிரச்சினைக்கு தீர்வு

Report Print Steephen Steephen in தேர்தல்

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தை தனியான பிரதேச சபையாக மாற்றுவது சம்பந்தமான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணப்படும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்வி ஒன்று இன்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரச நிர்வாகம், முகாமைத்துவம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் இன்று நடைபெற்றது.